திருவாரூர் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! தயாராகும் வேட்பாளர்கள்!thiruvarur collector announced about election

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவிற்குப் பின்  திருவாரூர் சட்டமன்ற அமைச்சருக்கான பதவி காலியாக உள்ளது.

இந்நிலையில் அதனை பூர்த்தி செய்யும் விதமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் உள்ளது. மேலும் அந்த தேர்தல்  ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் பெறப்படும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கூறும்பொழுது, திருவாரூரில் 2,58,687 வாக்காளர்கள் உள்ளனர். 303 வாக்குச்சாவடிகள் உள்ளது. தேர்தல் அசம்பாவிதமும் ஏற்படாமல் நேர்மையான முறையில் நடக்க 9 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.