திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் - வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன்.!



 Thirumavalavan on Vengaivayal Case 25 Jan 2025 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர், உள்ளூர் பிரச்சனையில் விசமத்தனமான எண்ணத்துடன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. குற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கு பின், சிபிசிஐடி விசாரணையில் இந்த தகவல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் உண்மை இல்லை என விசிக, பாஜக தரப்பு கருத்துக்களை தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "சிபிசிஐடி விசாரணையில் 3 பட்டியலின இளைஞர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. காவல்துறையினர் குற்ற பிரிவை சார்ந்தவர்கள் விசாரிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று நாம் வைத்த கோரிக்கை அடிபடையில் சிபிசிஐடி விசாரணை நியமிக்கப்பட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இது விசாரணை நடத்தி முடித்து இப்போது புகார் கொடுத்தவர் மீது, பாதிக்கப்பட்ட மக்களின் மீது இவர்கள் தான் அந்த குற்றத்தை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: திமுக என்றாலே உருட்டு, இருட்டு.. சீமான் பரபரப்பு பேச்சு.!

tamilnadu politics

போராட்டம் நடத்தியவர்கள் கைது

நியமிக்கப்பட்டு இருக்கிற சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது. தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் விடுகிற வேண்டுகோள் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விடுதலை சிறுத்தைகளும் இந்த போக்கை கண்டித்து கிராமத்திலேயே அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் பலரை கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சார்ந்த அந்த பகுதியை சார்ந்த, வட்டாரத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல தோழர்களை கைது செய்து சிறைப்படுத்திருப்பது மிக வன்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. 

டிஎன்ஏ பரிசோதனை இல்லை

திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுருக்கு நீதி கிடைப்பதற்கு இந்த அரசு துணையாக இருக்கும் என்று நம்புகிறோம். காவல்துறையினரின் இந்த போக்கை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று தமிழக அரசுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது எவ்வாறு மீண்டும் எடுத்துச் செல்வோம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கிற வரையில் மக்களோடு சேர்ந்து போராடுவோம். டிஎன்ஏ பரிசோதனை மூலமாக இது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.!