#Breaking: திமுக என்றாலே உருட்டு, இருட்டு.. சீமான் பரபரப்பு பேச்சு.!



  Seeman on DMK 25 Jan 2025 

மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது என சீமான் விமர்சனம் செய்தார். 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராக நியமனம் செய்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மக்களை ஏமாற்றினார்

அப்போது அவர் பேசுகையில், "நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து, இன்று முடியாது என கூறுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி வந்தால்தான் ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்திருக்க வேண்டும். ரகசிய திட்டம் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் வகையில் பேசி திமுக ஆட்சிக்கு வந்தது. 

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.! 

tamilnadu politics

திமுகவுக்கு புதிய விளக்கம்

கூட்டுறவு கடன் தள்ளுபடி, நகையை அடமானம் வைத்து கடன் பெறுங்கள் என கூறிவிட்டு, இன்று வரை நகை கடன் தள்ளுபடி இல்லை. மக்களை ஏமாற்றும் வார்த்தைகள் அது. திமுக என்றாலே உருட்டு, அதை காப்பாற்றுவதில் இருட்டு செய்வது. அவ்வுளவுதான்" என பேசினார்.

இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!