தமிழகத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தலா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

தமிழகத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தலா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!



tamilakam---urgent---election-2019

தெலுங்கானாவில் முன்கூட்டியே சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதே பாணியை கடைபிடித்து தமிழகத்திலும் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவை ஆளும் ராஷ்ட்ரிய சமிதி மத்தியில் ஆளும் பாஜக வுடன் ரகசியமாக உறவு வைத்துள்ளதாக அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பகிரங்கமாக பேசப்பட்டு வருகிறது. இதை மறுக்க முடியாத நிலையில் அங்கு ஆளும் அரசு உள்ளது. எனவே முழு பதவிக்காலமும் முடிவதற்குள் மக்களிடையே இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டிய ஏற்பாடுகளை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்து வருகிறார்.

Tamil Spark

இதேபோல் தமிழகத்தில் ஆளும் அரசும் மத்திய அரசுடன் தற்போது இணக்கமான உறவுடன் உள்ளது. அதனால் அனைத்து தரப்பினரிடமும்  மத்திய அரசுடன் ரகசியமாக உறவு வைத்துள்ளதாக பகிரங்கமாக பேசப்படுகிறது. இந்த சூழலில் இங்கும் விரைவில் தேர்தலை நடத்த டெல்லியும் சென்னையும் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தற்சமயம் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் சென்னை மட்டத்தில் இல்லாமல் டெல்லி அளவில் உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபைக்கான ஆட்சி காலம்  2021 வரை  இருக்கிறது. 

Tamil Spark

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலானது அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று நம்பத்தகுந்த டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதனால் தான் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல்களை 
தற்போது நடத்தாமல் திட்டமிட்டே தேர்தல் ஆணையம் காலதாமதம் ஆக்குவதாகவும் செய்திகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.