சற்று முன்... திமுக - வினர் கடும் அமளி! என்கிட்ட வராதீங்க! வெளியே போங்க.... சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய சபாநாயகர்! மிரண்டுபோன எம்.எல்.ஏ-க்கள்.... வைரலாகும் வீடியோ..!!!



tamil-nadu-assembly-dmk-protest-speaker-order

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதனை ஏற்க பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மறுத்தார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகர்

சர்க்காரியா கமிஷன், மிசா சட்டம், அவையில் இல்லாத நபர்கள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: BREAKING : மனிதாபிமான அடிப்படையில் அனைத்து வழக்குகளும் ரத்து...! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!!

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சரின் உரையில் எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றும், அவ்வாறு நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

‘ஜனநாயகம் செத்துப்போச்சு’ என முழக்கம்

சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். அங்கு ‘செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனநாயகம் செத்துப்போச்சு’ என முழக்கங்களை எழுப்பிய அவர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அமளி நீடித்த நிலையில், திமுக உறுப்பினர்கள் அவையை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டு வந்துள்ளதாக சபாநாயகர் குற்றம்சாட்டினார். அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய உறுப்பினர் ஒருவரை பார்த்து கோபத்துடன் ‘கெட் அவுட்’ என்றும் அவர் கூறினார்.

அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்

அமளி தொடர்ந்ததால், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திமுக உறுப்பினர்களின் போராட்டம் மற்றும் அவர்களை வெளியேற்றிய நடவடிக்கையால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 

இதையும் படிங்க: சட்டசபையில் வெடித்த சினிமா பாணி அரசியல்! உதயநிதி ஸ்டாலின் பேச்சிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு! அனல் பறந்த விவாதம்..!!!