சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரபல அரசியல் தலைவர்..!

சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரபல அரசியல் தலைவர்..!


singer simaye sex tourcher support tamilisai

இன்றைய சூழலில் திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை #MeToo என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் கவிஞர் வைரமுத்து மீதும் பாடகி சின்மயி பாலியல் ரீதியாக எனக்கு தொல்லைகள் கொடுத்தார் என பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாடகி சின்மயி பதிவிடும் போது அதை பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாசிரியர் சந்தியா மேனன் என்பவரும் வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வாட்சப்பில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவையும் தனது அது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

singer sinmaye

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாடகி சின்மயி கருத்து கவனிக்கத்தக்கது, நாளுக்கு நாள் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சினிமா துறையில் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் சினிமாத் துறையில் உள்ளவர்கள் அந்த துறையில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்ளாமல் அரசியல்வாதிகளை விமர்சித்து வருகிறார்கள் என்று கூறினார்.