"மூழ்கும் கப்பலில் பாமக.?!" செல்வப் பெருந்தகை.. நக்கல் கருத்து.! 

"மூழ்கும் கப்பலில் பாமக.?!" செல்வப் பெருந்தகை.. நக்கல் கருத்து.! 



Selva perundhagai about pmk Bjp coalition

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. 

bjp

இறுதியில், பாஜக உடனே கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து இணைவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தைலாபுரம் தோட்டத்திற்கு விரைந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார். அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோரும் இணைந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பின்னர் தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் அண்ணாமலையும், ராமதாஸும் கையெழுத்திட்டனர். பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

bjp

ஆனால் அவை, எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இது குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பல்வேறு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பாஜக கூட்டணி குறித்தும் அவர் பேசினார். அதில், "மூழ்கும் கப்பலில் பாமக ஏறி இருக்கிறது அதுவும் சேர்ந்தே மூழ்கும். தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் போட்டியிட்டால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை தான் பெறுவார்." என்று தெரிவித்துள்ளார்.