திடீரென தூக்கப்படும் நிருவாகிகள்! ரஜினி எடுத்த அதிரடி முடிவு! பின்னணியில் யார்?

திடீரென தூக்கப்படும் நிருவாகிகள்! ரஜினி எடுத்த அதிரடி முடிவு! பின்னணியில் யார்?


Rajini mantram members removed from rajini party

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த வருடம் தெரிவித்தார். மேலும், அணைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் தெரிவிதித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்றும் சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

rajinikanth

மேலும் ரஜினி மன்றம் என்ற பெயரையோ அல்லது கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்புகளில் இருந்த 20 முக்கிய நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த 20 பேரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தே நீக்கப்பட்டு விட்டதாக மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் தெரிவித்துள்ளார். எதற்காக இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.