சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
முதலமைச்சரை பற்றி கமல் 60 நிகழ்ச்சியில் பேசிய ரஜினி! ட்வீட்டரில் நடிகர் ரஜினியை வெச்சு செய்து அதிமுகவினர் போட்ட பரபரப்பு ட்வீட்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு பட்டிதேட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த், கமல் இருவரும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி அவர்கள் கமல் 60 விழாவில் கலந்து கொள்ளும் போது முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.
அதற்கு தற்போது அதிமுகவினர் ட்விட்டரில் கண்டக்டராக இருந்த ரஜினியும் இன்று சூப்பர் ஸ்டார் ஆவர் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.
கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்
— AIADMK (@AIADMKOfficial) November 19, 2019
முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர்
- கழக நாளேடு 'நமது அம்மா' ( 19 - 11 -19 )