அரசியல் தமிழகம்

ரஜினிகாந்த் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறதா! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

Rajini

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை நாளை காலை ரஜினி அறிவிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அதில் ரஜினி அவர்கள் மாவட்ட செயலாளருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில் மீண்டும் நாளை மாவட்ட செயலாளர்களை காலை 8 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கயுள்ளார். அந்த சந்திப்பில் 38 ரஜினி மன்ற மக்கள் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

மேலும் அந்த சந்திப்பில் கட்சி குறித்தும்,  சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான தகவல்களை பேச வேண்டும் என்றும் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே அதன் பிறகு கட்சி சம்பந்தமான முக்கிய அறிவிப்பை கூறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Advertisement