சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி!. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடந்த சம்பவம்!
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை முதல் தற்போது வரை மக்களவையில் நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்த பிறகு இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க இருப்பதாக தெரிகிறது. இந்த விவாதத்தினை சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏற்கனவே புறக்கணித்து விட்டன.
லோக் சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது இருக்கைகே சென்று கட்டியணைத்தார். லோக் சபா கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சனம் செய்து பேசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருந்தார். அதன் பின்னர், ராகுல் காந்திக்கு பேச கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தனது உரையை முடித்த ராகுல் காந்தி, நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டிபிடித்தார். இதனை மோடி சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும், பதிலுக்கு அவர் ராகுல் காந்திக்கு கைகொடுத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.