மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் மீண்டும் ஆட்சியில் பாஜக தான் - பிரதமர் மோடி உரை



pm-modi-video-conference-speech

ந்தமான் நிகோபார் தலைநகருக்கு உட்பட்ட போர்பிளேரில் வீர சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. 

சிப்பி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையம், கடலின் அழகை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இது ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இங்கு 10 விமானங்களை நிறுத்த முடியும் என்று தெரிகிறது.

இந்திய பிரதமர் மோடி இன்று ரூபாய் 710 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய முனையம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்களுக்காகவே புதிய வாய்ப்புகளையும், புதிய வசதிகளையும் பாஜக அதன் ஆட்சியில் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஊழலுக்கு கேரன்டி தருகின்ற கூட்டமாக உள்ளது. ஊழல்வாதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தும் கூட்டமாகவே எதிர்க்கட்சி கூட்டம் திகழ்கிறது.

அவர்களது சொந்த குடும்பத்திற்காக அவர்களது குடும்பத்தால் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகளின் கொள்கையாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் மீது ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவராக நற்சான்றுகளை வழங்கி வருகிறார்கள் . அவர்கள் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற வன்முறை குறித்து பேச மறுக்கிறார்கள். மக்கள் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்துள்ளனர், என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.