#LokSabha: "சென்னை டு நாக்பூர்.." பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்.!!

#LokSabha: "சென்னை டு நாக்பூர்.." பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்.!!



pm-modi-tamilnadu-visit-and-full-schedule

2024 ஆம் வருட பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பாமக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்தக் கூட்டணியை வெற்றி கூட்டணியாக பாஜகவின் தேசிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்திற்கு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

politicsகடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து வாகன பேரணி மற்றும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் செய்து பாஜக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

politicsஇந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். அவர் சென்னையில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்டார் . இதனைத் தொடர்ந்து ராஜ் பவனில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு வேலூர் புறப்பட்டு செல்கிறார் . வேலூர் கோட்டையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விமானம் மூலம்  கோவை செல்லும் பிரதமர் மதியம் 1:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து நாக்பூர் செல்கிறார் பிரதமர் மோடி.