திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு இப்படி தான் இருக்குமோ? - பாண்டே கணிப்பு

திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு இப்படி தான் இருக்குமோ? - பாண்டே கணிப்பு


pandey-about-dmk-alliance

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் பிடிவாதம் பிடித்ததாக தகவல் வெளியான நிலையில், நேற்று ராகுல்காந்தி முன்னிலையில் இதற்கு சுமூக தீர்வு காணப்பட்டதாக தெரிகிறது.

Dmk alliance

இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினரும் 3ஆம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். எனவே, இன்று மாலை திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கே எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியலை ரங்கராஜ் பாண்டே இன்று காலையே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "DMK கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு இப்படி தான் இருக்குமோ?" என்று உறுதி செய்யாதவாறு சூசகமாக தனது பட்டியலை பாண்டே வெளியிட்டுள்ளார்.