பனையூருக்கு தூதுவிட்ட ஓபிஎஸ் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தவெகவின் தரமான சம்பவத்தால்... ஓபிஎஸ் குடும்பத்தில் வெடித்த மோதல்!!!
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் எனப்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து குடும்பத்திலேயே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தை - மகன் இடையே மாறுபட்ட அரசியல் அணுகுமுறை
எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு, அவரது ஆதரவாளர்களிடையே கலவையான எதிர்வினையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் எம்.பி.யும் அவரது மகனுமான ரவீந்திரநாத் இந்த முடிவில் முழுமையாக உடன்படவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு தந்தையிடம் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தவெக தொடர்பாக நடந்த ஆலோசனைகள்
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும் என்ற கணிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் முயற்சியில் ரவீந்திரநாத் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பனையூரில் உள்ள தவெக தலைமையுடன் தொடர்பு கொள்ளப்பட்டபோதும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வந்தால் மட்டுமே அரசியல் ரீதியாக வலிமை அதிகரிக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த அரசியல் முடிவு என்ன?
ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்த சில முன்னாள் நிர்வாகிகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, மகனின் யோசனைக்கு ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவில் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ரவீந்திரநாத் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அரசியல் அணுகுமுறையில் மனக்கசப்பு நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இனி அந்த பேச்சுக்கே இடமில்லை... பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த OPS...! தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்.!!!