நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்ன அந்த வார்த்தை..... அடுத்த நொடி பிராச்சாரத்தில் நடந்தது என்ன? குமரியில் பரபரப்பு!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ பெரும் கவனம் பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தன.
காமராஜர் சிலைக்கு மரியாதையுடன் தொடக்கம்
வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் ஊர்வலம் தொடங்கியது. பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஒரே வாகனத்தில் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்தது.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி! அதிமுக கூட்டணியில் இணையும் கட்சி! அதிகரிக்கும் அதிமுக வின் பலம்!
மக்கள் திரள், முழக்கங்கள், உற்சாகம்
வேப்பமூடு முதல் வடசேரி அண்ணா சிலை வரை சுமார் 1.5 கி.மீ நீளத்தில் நடந்த ஊர்வலத்தின் போது சாலையின் இருபுறமும் பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டிருந்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்ட மக்கள் மலர்களைத் தூவி வரவேற்றனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடியும் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அருகில் இருந்த அண்ணாமலையையும் அழைத்து மக்களிடம் கைகாட்டச் செய்தார்.
வாகனத்தில் நடந்த சுவாரஸ்ய தருணம்
ரோடு ஷோ முடிவில் வடசேரி அண்ணா சிலை அருகே வாகனம் நின்றது. அப்போது வாகனத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொண்டர்களை நோக்கி கையசைத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை நோக்கி கீழே இறங்குமாறு சைகை காட்டினார். அதன்பின் அனைவரும் வாகனத்திலிருந்து இறங்கி அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு தயாராகும் மோடி
நிகழ்ச்சி நிறைவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட வேட்பாளர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டார். வரும் 18ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் மீண்டும் பங்கேற்க உள்ளதால், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.