திமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!



meena-jayakumar-resigns-dmk-coimbatore

கோவையைச் சேர்ந்த திமுகவின் முக்கிய பெண் நிர்வாகியான மீனா ஜெயக்குமார், கட்சியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பல்வேறு அதிருப்திகள் பேசப்பட்டு வரும் சூழலில், அவரது இந்த முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.. அதிமுகவில் ஐக்கியமாக போகும் முக்கிய புள்ளி..? மகிழ்ச்சியில் துள்ளும் எடப்பாடி!!!

கோவையில் அறியப்பட்ட பெண் நிர்வாகி

திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த மீனா ஜெயக்குமார், ‘ஆலம் விழுதுகள்’ அறக்கட்டளை மூலம் கோவை பகுதியில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

கடந்த மாநகராட்சித் தேர்தலின் போது கோவை மேயர் வேட்பாளராக அவரது பெயர் பரவலாக பேசப்பட்டது. ஆனால், வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சி நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்த அவர் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

லீமா ரோஸ் மார்ட்டின் சந்திப்பு சர்ச்சை

அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் குடும்பத்தினரை மீனா ஜெயக்குமார் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், சில திமுக ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர்.

இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரமே அவர் விலகும் முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“திறமையானவர்களுக்கு அங்கீகாரம் இல்லை”

தனது விலகல் குறித்து வெளியிட்ட வீடியோவில், லீமா ரோஸ் மார்ட்டின் தனது 20 ஆண்டு கால குடும்ப நண்பர் என்றும், நட்பின் அடிப்படையில் சந்தித்ததற்கே விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவில் திறமையானவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், கொங்கு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

உழைப்பிற்கு மதிப்பு கிடைக்காத அதிருப்தியிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருப்பது, கோவை மாவட்ட திமுக வட்டாரத்தில் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி..!!!