ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.! அமித்ஷா ஆபரேசன் தென் இந்தியாவில் ஆரம்பமா.?

ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.! அமித்ஷா ஆபரேசன் தென் இந்தியாவில் ஆரம்பமா.?



lot of comments about rajya sabah MP

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் இசைத்துறையில் இசைஞானி இளையராஜா செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில் இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது. அதேபோல், கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா, சர்வதேச தடகள போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரை  கவுரவிக்கும் வகையில் பி.டி.உஷாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது.

அதேபோல்ஆந்திராவை சேர்ந்த புகழ்பெற்ற இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்திய பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஸ்வ விஜயேந்திர பிரசாத் அவர்களை மாநிலங்களவை நியமன எம்.பி. ஆக நியமனம் செய்துள்ளது. அதேபோல் கர்நாடக தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியாக கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறுப்பு வகித்து வரும் வீரேந்திர ஹெக்டே அவர்களை மாநிலங்களவை நியமன எம்.பி. ஆக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த நிலையில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4 நியமன மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புகளையும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரபலமாக திகழும் நபர்களுக்கு வழங்கி இருப்பது அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியாவில் ஆரம்பமா என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.