அரசியல் தமிழகம்

கைவிட்டு போன குஷ்பு மிகவும் எதிர்பார்த்த தொகுதி.! இந்த நேரத்திலும் குஷ்பு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இணைந்து சந்திக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக -விற்கு தொகுதிகளை அதிமுக அறிவித்தது. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்பட்டது. பாஜகவை சேர்ந்த  நடிகை குஷ்பு அங்கு கடந்த மூன்று மாதங்களாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை அதிமுக தலைமை பாமகவுக்கு ஒதுக்கியது.

இந்தநிலையில், குஷ்பு கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மாற்றத்தை கொண்டு வருவதற்கு நம்பி என் ஒவ்வொரு பயணத்திலும் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. கடந்த 3 மாதங்கள் அழகாக இருந்தன, ஒரு சிறந்த நபராக மாறுவதற்கு ஒரு பாடம் கற்றேன். சேப்பாக்காம் - திருவல்லிக்கேணியுடன் என் பந்தம் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement