சட்டமன்றதுக்குள் ஸ்டாலின் நுழைவாரா..? பலத்தை நிரூபிக்குமா ஆளும் கட்சி..! கொளத்தூரில் நடக்கப்போவது என்ன? CM விஜய்யின் மாஸ்டர் மூவ்..!!!



kolathur-bypoll-stalin-udhayanidhi-tvk-candidate

மு.க. ஸ்டாலினை தோற்கடித்து அரசியல் கவனம் பெற்ற கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவால், அந்தத் தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இதையடுத்து கொளத்தூரில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா அல்லது திமுக இளம் தலைமுறைக்கு வாய்ப்பு வழங்குமா என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொளத்தூரில் மீண்டும் களமிறங்குவாரா ஸ்டாலின்?

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உருவான கொளத்தூர் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...! தவெக-வில் இணைந்த முக்கியப் புள்ளி..! சண்முகநாதனின் குடும்பத்தையே கூண்டோடு தூக்கிய முதல்வர் விஜய்..! செம ஷாக்கில் எடப்பாடி..!!!

தற்போது இடைத்தேர்தல் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என திமுக மூத்த நிர்வாகிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அரசியல் பலத்தை மீண்டும் நிரூபிக்க முடியும் என அவர்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் விலகி இளம் தலைமுறைக்கு வாய்ப்பா?

அதேநேரத்தில், திமுக அடுத்த தலைமுறையை நோக்கி நகர வேண்டிய சூழலில், ஸ்டாலின் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தும் கட்சியின் ஒரு தரப்பில் நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் விஜய் மற்றும் உதயநிதி இடையேயான போட்டி குறித்த பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்து எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றால் உதயநிதியின் அரசியல் முக்கியத்துவம் குறையக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொளத்தூரில் இளம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக வேட்பாளர் யார்? பலத்தை நிரூபிக்குமா ஆளுங்கட்சி?

வி.எஸ். பாபு மறைவால் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 108 ஆகக் குறைந்துள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது ஆளுங்கட்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளுடன் கொளத்தூரிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற தவெக தீவிரமாகத் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொளத்தூரில் தவெக சார்பில் சென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளரும் தொகுதி நிர்வாகியுமான எம்.டி.சி. என். தணிகா போட்டியிடலாம் என பேச்சு எழுந்துள்ளது. அதேவேளை, மறைந்த வி.எஸ். பாபுவின் மகன் சதிஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கி அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனால் கொளத்தூர் இடைத்தேர்தல், திமுகவின் அடுத்த தலைமுறை அரசியல் நகர்வுகளுக்கும், ஆளுங்கட்சியான தவெக சட்டப்பேரவை பலத்தை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியமான தேர்தலாக அமையக்கூடும். இரு கட்சிகளும் அறிவிக்கப்போகும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதி..! 70 தவெக MLA-க்கள் அதிருப்தி..! ஒருபுறம் திமுக ஆட்சியாம்... மறுபுறம் அதிமுக மலருமாம்..! CM விஜய்யின் பிளான் என்ன..? .