அரசியல் இந்தியா

அதிமுக எம்எல்ஏ-வின் பேச்சை இடையில் நிறுத்திய ஆளுநர்; மேடையில் ஏற்பட்ட சலசலப்பு வீடியோ..!!

Summary:

kiran bedi with admk mla

புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக இருந்து வருபவர் கிரண்பேடி. இவர் அவ்வப்போது செய்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிக்கொண்டிருந்த அதிமுக எம்எல்ஏ-வின்  பேச்சை இடையில் நிறுத்தச் சொன்னதால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி உப்பளத்தில் இன்று காலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 150வது காந்தி ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. இதில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் மைக்கில் பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், அவருடைய தொகுதியில் அரசு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஒன்றுமே நிறைவேற்றப்பட்டவில்லை என்றும் கூறினார். மேலும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் ஆவேசமாக பட்டியலிட்டார். 

புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் நிலையில், தனது தொகுதியில் குப்பைத் தொட்டி வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி பேசிக் கொண்டிருந்தார். அரசு விழா என்பதால் நேரத்தை கடைப்பிடித்து பேச்சை முடிக்குமாறு கிரண்பேடி கூறினார்.

ஆனால், அவர் தொடர்ந்து பேச முயற்சி செய்ய, 'மைக்'கை ஆப் செய்ய கவர்னர் உத்தரவிட்டார். இதன் பேரில், 'மைக்' சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே, மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையெடுத்து கும்பிட்டு, இருக்கையில் அமரும்படி கூறினார். இல்லை என்றால் விழா நடத்துவதற்கு உதவியாக, மேடையை விட்டு இறங்குங்கள் என்று கூறினார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி மைக்கை  ஆப் செய்யலாம். இது தவறான விஷயம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். இவ்வாறு செயல்பட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

puducherry lt give kiranbedi aiadmk mla engaged in a verbal spat at a public event

கிரண்பேடி, மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோஷமிட்டவாறு அன்பழகன் விழாவை புறக்கணித்து சென்றார். இந்த வாக்குவாத சம்பவத்தால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


Advertisement