அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் ஜோதிர் ஆதித்ய சந்தியா!

Summary:

Jothir aathithiya santhiya

நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சந்தியா சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பை அடுத்து தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக உள்ளதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தை பார்த்து விட்டு ஜோதிர் ஆதித்ய சந்தியாவை கட்சியிலிருந்து விலக்குவதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஜோதிருக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.


இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஜோதிர் ஆதித்ய சந்தியா பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதனால் மீண்டும் அந்த பகுதியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் சந்தோசமடைந்த பாஜக தொண்டர்கள் போபாலில் உள்ள கட்சித் தலைமையகத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement