அரசியல் தமிழகம்

"சத்தியமா சொல்றேன், ஆடியோல இருக்கிறது என் குரல் அல்ல.!" சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Summary:

it's not my voice minister jeyakumar speech

நாடு முழுவதும் பாலியல் தொந்தரவு குறித்து சமூக வலை தளங்களில் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுகின்றது. MeToo அமைப்பின் மூலம் பல பிரபலங்களின் முகத்திரைகள் 
கிழிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு இளம் பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைக்க உதவியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிக்கியுள்ளார்.

நேற்று முதல் சமூகவலைதளங்களில் அமைச்சர் ஜெயக்குமார் குரலில் ஒரு ஆடியோவானது வைரலாக பரவிவருகின்றது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் தான் கர்ப்பமாக்கிய ஒரு பெண்ணின் தாயிடம் பேசுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. 

மேலும் அந்த ஆடியோவில் அமைச்சர் ஜெயக்குமார் அந்த பெண்ணின் கருவை கலைப்பதற்கு பண உதவி செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அந்த பெண்ணின் தாயாரை தனியாக வந்து அவரது இல்லத்தில் சந்திக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயார் மிகுந்த பயத்துடன் பேசியிருப்பது அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது.

தொடர்புடைய படம்

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "இது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எனக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட போலியான ஆடியோ ஆகும். என்னை நேரடியாக எதிர்க்க துணி இல்லாதவர்கள் இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இப்பொது இருக்கும் தொழில்நுட்பத்தில் வீடியோவிலேயே ஆட்களை மாற்றும் அளவிற்கு வசதிகள் உள்ளன. அதேபோன்று குரலை மாற்றுவது மிகவும் எளிதான விஷயமே. அப்படித்தான் எனது குரலை போலியாக சித்தரித்து அந்த ஆடியோவை பரப்பியிருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ttv dinakaran க்கான பட முடிவு

இதன் பின்னணியில் டிடிவி தினகரன் தான் இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னிடம் ஒரு ஆடியோ உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார். எனவே இது அவர்களது சதிதான் என அமைச்சர் கூறியுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட சதி. இது தொடர்பாக நான் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன். மேலும் அவர்களை எதிர்த்து நிச்சயமாக வழக்கு தொடர்வேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Advertisement