ஒட்டுமொத்தமா மாற போகுது.... ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! இனி இவர்களுக்குப் பதவி கிடையாது... திமுக - வில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!



dmk-party-reorganization-district-secretaries

திமுகவின் உட்கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள கட்சித் தலைமை தயாராகி வருகிறது. இதற்காக விரைவில் செயற்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளைக் கழகம் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நிர்வாகப் பொறுப்புகள், உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளன.

70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை?

கட்சியின் நிர்வாகத்தில் புதிய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில், 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கக் கூடாது என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக சில இடங்களில் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பின்னர் முறைப்படி கழகத் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதையும் படிங்க: திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!

கிளை முதல் மாவட்டம் வரை புதிய நிர்வாக அமைப்பு

நிர்வாகப் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் வார்டு மற்றும் தொகுதி அளவிலான பிரிவுகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய வரைமுறையின்படி, 10 வாக்குச்சாவடி பாகங்களுக்கு ஒரு கிளைச் செயலாளர், 40 ஆயிரம் பேருக்கு ஒரு வட்டச் செயலாளர், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று பகுதிச் செயலாளர்கள் என பொறுப்புகள் பிரிக்கப்பட உள்ளன.

அதேபோல், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் 100 முதல் 120 மாவட்டச் செயலாளர்கள் வரை நியமிக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

சென்னையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு

இந்த மறுசீரமைப்பில் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் கவனம் பெற்றுள்ளன. எம்பி பரந்தாமன், கே.கே.நகர் தனசேகர் ஆகியோருக்கு புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அண்ணாநகர் எம்.எல்.ஏ. எம்.கே. மோகனின் மகன் கார்த்திக், சோழிங்கநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு இந்த மாற்றங்கள் குறித்த தெளிவான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை ஓரங்கட்டினா கட்சி தலைமை.... டெல்லியை நோக்கி பயணம்? கொங்கு மண்டல அரசியலில் அடுத்த மூவ்..!!!