திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து திமுக அமைப்பில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த கட்சித் தலைமையினர், நிர்வாக அமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கட்சியில் கூடுதல் அதிகாரத்துடன் புதிய பொறுப்பை ஏற்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடு ஆய்வு
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு மறுசீரமைப்புக்குழு, மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில், எதிர்பார்த்த அளவில் பணியாற்றாத 20 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும்... மீண்டும்.... "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர் "..! திருச்சி ஏர்போர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு ...!!!
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த மாற்றங்களை உடனடியாக அமல்படுத்துவதா அல்லது தேர்தலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பா?
கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் காவிரி தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட உதயநிதிக்கு தஞ்சையில் திமுகவினர் அளித்த வரவேற்பும், அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவும் அவரது அரசியல் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய முடிவுகளில் முழு சுதந்திரம்?
மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவராகத் தொடரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கும் வாய்ப்பு குறித்து கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் காலத்தில் சுணக்கமாக செயல்பட்டதாகக் கருதப்படும் சில மூத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, புதிய நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்காலத் தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் உதயநிதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: ஆணவ அரசியலால் ஆட்சிக்கே பாதிப்பு...! த.வெ.க. அரசை கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!!!