3 மாதத்தில் எல்லாவற்றையும் வெளியிடுவேன்; ஓபிஎஸ்யை திணறடிக்கும் தினகரன்..!!



dinakaran talks about ops

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தினகரனை சந்தித்தது தொடர்பான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பன்னேர்செல்வம் அனைத்தையும் ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன் என தினகரன் கூறியுள்ளார்.

இன்று நிருபர்களை சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான் தினகரனை ரகசியமாக சந்தித்து அது உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளார் இதைப்பற்றி அவர் கூறுகையில் "2017ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது நான் தர்மயுத்தம் நடத்தி வந்தேன். எனவே அவரை சந்திக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் நூறு முறையாவது எனக்கு அழைப்பு வந்தது. எனவே மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். இது எனது உடன் இருந்தவர்களுக்கு கூட தெரியாது" என்று கூறினார்.

ops met dinakaran

இந்நிலையில் இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் "ஓபிஎஸ் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் துரோக சிந்தனை கொண்டவர். அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களித்தவர் ஓ.பி.எஸ். 

எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்கி விட்டு என்னுடன் சேர்ந்து செயல்பட விரும்பினார். ஆனால் ராஜவிசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா. ஓபிஎஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் இனியும் நம்ப மாட்டார்கள். 

அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் பழக்கம் எனக்கு இல்லை. உண்மைன்னா உண்மை என்பேன். இல்லை என்றால் இல்லை என்பேன். ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார். அவருடன் இருந்த பத்து பத்தினைந்து பேரையும் அவர்கள் இழுத்து விட்டார்கள்.

ops met dinakaran

ஓபிஎஸ் என்னிடம் பேசியது பொய் தகவல் என எல்லோரும் சொல்லி வந்தீர்கள். ஆனால் அவரே அதை ஒப்புக்கொண்டுவிட்டார். செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார் அந்த சூட்சுமம் எனக்கு தெரியும். இன்னும் கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுக்கிறேன். 

இன்னும் 3 மாதத்தில் எல்லாவற்றையும் அவரே ஒத்துக் கொள்வார். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன் என்று தினகரன் தெரிவித்தார்.