கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
எச். ராஜா மற்றும் கருணாஸின் சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் எடப்பாடி!!

நான்கு நாட்களுக்கு முன்பு சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏ கருணாஸ் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார்.
இதனை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் கருணாஸ் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை கருணாஸ் அவரது இல்லத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி, எச்.ராஜா, கருணாஸ் போன்றோரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
அரசியல் இருப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறினார். இதன் மூலம் எச்.ராஜா, கருணாஸ் போன்றோர் அரசியல் நாகரிகம் தெரியாமல் நடந்து கொள்கின்றனர் என்பதை சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர் "சட்டம் தன் கடமையை செய்யும். எதையும் தவறவிடவில்லை. எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை தன் கடமையை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். தவறுக்கு உண்டான நடவடிக்கையை காவல்துறை நடவடிக்கை எடுக்கும். பொதுவாழ்வில் வந்துவிட்டால் அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்ற அந்த நாகரீகம் தெரியாமல் சில பேர் நடந்து கொள்கிறார்கள் சட்டம் அதற்கு தகுந்த கடமையை செய்யும்" என்றார்.