அதிமுக-வை நோக்கி படையெடுக்கும் திரைபிரபலங்கள்! வலுவடையும் எடப்பாடி அணி

அதிமுக-வை நோக்கி படையெடுக்கும் திரைபிரபலங்கள்! வலுவடையும் எடப்பாடி அணி


Cine actors in Admk

எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.

Admk

டிசம்பர் 24, 1987 அன்று எம்.ஜி.ஆர் மறைவையடுத்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அப்போது திரையுலகில் பிரபலமாகவும் எம்.ஜி.ஆர்க்கு நம்பிக்கையாகவும் இருந்த ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றினார். 

அதன்பின் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ஆம் ஆண்டு இறந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் நடந்த குழப்பங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற திரைப் பிரபலங்களால் வளர்ந்த அதிமுகவை எந்த நட்சத்திரங்களும் இல்லாமல் தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வழிநடத்தி வருகின்றனர். 

Admk

இந்நிலையில் இன்று திரைத்துறையை சேர்ந்த நடிகை கஸ்தூரி மற்றும் கஞ்சா கருப்பு இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர்.