பா.ஜனதா ஆட்சிக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்..!! பிருந்தா காரத் திட்டவட்டம்..!!



Brinda Karath has said that people are ready to say goodbye to the BJP in Madhya Pradesh

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சிக்கு பிரியா விடை கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக பிருந்தா காரத் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவ்ராஜ் சிங் சவுகான், முதல்வர் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு மாதத் தொகையான ரூ.1,000க்கு மேல் ரூ.250 ஐ ராக்கி பரிசாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.450 க்கு வழங்கப்படும் என்றும் இனி வரும் காலங்களிலும் இதே மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சிக்கு பிரியா விடை கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இலவசங்கள் குறித்து யோசிக்காத பா.ஜனதா கட்சி, தேர்தலுக்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இலவசங்களை வாரி வழங்குவதாக குற்றஞ்சாட்டினார்.