2 படங்களுக்கு ரூ.957 கோடி சம்பளம்... ஹாலிவுட்டையே மிரள வைத்த ராபர்ட் டௌனி ஜூனியர்!
பிரகாஷ் ராஜுக்கு 'கொலை மிரட்டல்' விடுத்த பாஜக எம்.எல்.ஏ மீது பாய்ந்த வழக்கு.!
நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ யஷ்பால் ஸ்வர்ணா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பியில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பேசிய யஷ்பால் ஸ்வர்ணா, பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்ததுடன், "அவர் அரபிக் கடலில் உள்ள மீன்களுக்கு இரையாக மாறுவார்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும், இதுபோன்ற மிரட்டல் தொனியிலான பேச்சுகள் ஏற்க முடியாதவை என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அந்த புகாரின் அடிப்படையில், யஷ்பால் ஸ்வர்ணா மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த கைது ஆ.ராசா.?! குறி வச்சா இரை விழனும்.. கமிஷனர் அலுவலகத்தில்.. அரசு மருத்துவர் பரபரப்பு புகார்..!
கர்நாடக அரசியலில் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இதுகுறித்து யஷ்பால் ஸ்வர்ணா தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.