இத்தனை நாள் இது தெரியாம போச்சே... பாடகி ஜானகி குரலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்!!!
அடுத்த கைது ஆ.ராசா.?! குறி வச்சா இரை விழனும்.. கமிஷனர் அலுவலகத்தில்.. அரசு மருத்துவர் பரபரப்பு புகார்..!
திருவாரூரில் கடந்த ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுக ஆ.ராசா.. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த பேச்சைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்து, சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராசா மணிகண்டன் என்பவரும் ஆ.ராசாவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஆ.ராசா முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது.! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு வழக்கில் போலீஸ் அதிரடி.!
ஏற்கனவே விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது ஆ.ராசாவையும் கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: "அவர் தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம்.! " அமைச்சர் நிர்மல் குமார் பளீர்.!