"அவர் தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம்.! " அமைச்சர் நிர்மல் குமார் பளீர்.!
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரியிருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, இன்று மதியம் போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு என்னிடம் கூறினார்கள். பொய் வழக்குகள் போட்டு என்னை அடக்க முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு அடுத்த அதிர்ச்சி! ஆனந்த் முன்னிலையில் இணைந்த பாஜக விஜயலட்சுமி அரவிந்த்..! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
இந்தக் கருத்து குறித்து தவெக அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் நகைச்சுவை கலந்த பதில் அளித்தார். "அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவில் இணையச் சொன்னதாக கூறுவது மிகவும் வேடிக்கையானது. அவர் தவம் இருந்தாலும் அவரை தவெகவில் சேர்த்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.

அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இந்த கருத்து குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது.! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு வழக்கில் போலீஸ் அதிரடி.!