நம்ம விஜய்யா இது? மாறுவேடத்தில் மக்களை சந்தித்த முதல்வர் விஜய்...? இணையத்தை கலக்கும் வீடியோ!!!
தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்பான பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் முதலமைச்சராகும் முன்பு சென்னையில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்றபோது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்தக் காட்சியை, பலரும் மீண்டும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
அரசியல் பயணமும் ஆட்சி அமைப்பும்
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார். தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், விசிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றார். கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்தது அவரது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: BREAKING : அடி தூள்.....விஜய்யுடன் கையை கோர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! இனி கோட்டையை ஆளப்போவது தவெக தலைவர் விஜய் தான்!!!
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், சில முடிவுகள் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகின. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிகளாக வெங்கட் நாராயணா மற்றும் ஜெகதீஷ் பழனிசாமிக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோல், மக்களை நேரில் அடிக்கடி சந்திப்பதில் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது 'சைலெண்ட் மோட்' அணுகுமுறையுடன் இணைத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
வைரலாகும் பழைய வீடியோ
இதற்கிடையில், தவெக நிர்வாகி ஆனந்த்ஜித், முதலமைச்சர் விஜய் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மக்களை சந்திக்கச் செல்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில், சென்னையில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்ற பழைய வீடியோ மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தக் காட்சியில், சாலையோரத்தில் நின்றவர்களிடம் மாறுவேடம் பூண்டிருந்த விஜய், “கஸ்தூரிபா நகருக்கு எப்படி செல்ல வேண்டும்? அங்கேதான் நடிகர் விஜய் இருக்கிறாரா?” என்று தன்னை வெளிப்படுத்தாமல் வழி கேட்பது இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/K8bBQFCBCo
— vikram muthu (@vikrammuthu8) July 3, 2026
இதையும் படிங்க: வெடித்த அடுத்த வெடிகுண்டு! த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி.? வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்.!!!