இரவில் சீக்கிரமாக நிம்மதியான உறக்கத்தை பெற... இதோ ஈஸி டிப்ஸ்.!
இரவு நேரங்களில் விரைவாகவும் நிம்மதியாகவும் உறங்குவதற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒழுங்கான தூக்க நேரம் மற்றும் ஆரோக்கியமான இரவு பழக்கவழக்கங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
தூங்குவதற்கு முன்பு லேசான குளியல் மேற்கொள்வது உடல் வெப்பநிலையை சீராக்கி, உடல் மற்றும் மனதை தளர்வடையச் செய்யும். அதேபோல், மிதமான சூட்டில் மஞ்சள் கலந்து பால் குடிப்பது சிலருக்கு நல்ல உறக்கம் கிடைக்க உதவக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரவு நேரங்களில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாக தண்ணீர் அருந்தினால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டிய நிலை ஏற்பட்டு, தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நல்ல தூக்கத்தையும் உடல் நலத்தையும் பெற வேண்டுமா? இதோ இந்த 10-3-2-1 ரகசியத்தை உடனே செய்யுங்க...அடுத்து நடக்கும் மேஜிக்கை பாருங்க!!!
தூங்கும் அறை மிகுந்த வெளிச்சமாகவோ அல்லது முற்றிலும் இருட்டாகவோ இல்லாமல், அமைதியான மற்றும் வசதியான சூழலில் இருப்பது நல்ல உறக்கத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. மேலும், தூங்குவதற்கு முன் மொபைல், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதை குறைப்பதும் பயனளிக்கும்.

மாமிச உணவுகளை சாப்பிட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், இரவு நேரத்தில் பல் துலக்குவது வாய்ச் சுகாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய பழக்கமாகும். உணவுத் துகள்கள் பற்களில் தங்காமல் இருக்க இது உதவுகிறது.
அதேபோல், தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பாக டீ, காபி, புகைப்பிடித்தல் மற்றும் நிக்கோட்டின் சார்ந்த பழக்கங்களைத் தவிர்ப்பது நல்ல உறக்கத்திற்கு உதவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த எளிய பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி வருகிறதா? உஷார்.! இப்போவே கவனிக்கலன்னா.. வருத்தப்படுவீங்க.!