தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#Breaking : கடலூரில் அடிதடியில் இறங்கிய பாஜக Vs பாமக.. அண்ணாமலை கூட்டத்தில் தள்ளுமுள்ளு.!
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்த இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் பாமக இணைந்து போட்டியிடுகிறது. சமீபத்தில் இதற்கான வேட்பாளர் அறிவிப்புகள் வெளியான நிலையில், இந்த கூட்டணியின் அடிப்படையில் கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவரை ஆதரித்து பாஜக மாநில தலைவரான அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த பிரச்சாரத்தின் போது முத்து நகரில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பாமகவினர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்திற்கு முன்பாக யார் நிற்க வேண்டும் என்பது குறித்து பாஜக மற்றும் பாமகவினர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் மோதலுக்கு உள்ளாகியது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் இரு கட்சி தரப்பினரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.