விரல் நுனியில் விவரங்களை வைத்து ஆளும் முதல்வர் விஜய்! புதுச்சேரியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.... ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!



assembly-speaker-jcd-prabhakar-puducherry-visit-stateme

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் நிலைத்தன்மை, சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தனது உறவினரான தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் பங்கேற்கவே புதுச்சேரி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #Breaking : “சோபா அரசியல் சர்ச்சை" உதயநிதி பேச்சுக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன்.!

“அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்”

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தற்போதைய அரசு அறுதி பெரும்பான்மை பெற்றிருப்பதாக குறிப்பிட்ட ஜே.சி.டி.பிரபாகர், அந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் கூறினார். எம்எல்ஏக்களின் ஆதரவும் அரசுக்கு இருப்பதால், ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதில்

கோவை சிறுமி கொலை உள்ளிட்ட சம்பவங்களை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை நேரடியாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.

“முதல்வர் விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஒத்துழைப்பு தருவதும், நல்லாசி கூறுவதும் அனைவரின் கடமை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்த கேள்விக்கும் பேரவைத் தலைவர் பதிலளித்தார்.

“இந்த விவகாரம் பற்றிய முழு தகவல்கள் இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை. உரிய நேரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டால், அதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது என் கடமை” என்று ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: # சற்று முன் : ஹாப்பி நியூஷ்....மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல்...!!!