சட்டமன்றத்தில் நேரலை திடீர் துண்டிப்பு! எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகள்..." வாயை திறங்க CM " நடந்தது என்ன?.. முழு விவரம்..!!!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை திடீரென நிறுத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிக்காததும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதத்தில், எதிர்க்கட்சியான திமுக தீவிரமான கேள்விகளை முன்வைத்தது. அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... மகன் மிதுனின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பை திட்டவட்டமாக அறிவித்த எடப்பாடி...! அதிரும் அரசியல் களம்..!!!
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகள்
திமுக எம்எல்ஏ ஆஸ்டின், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசை விமர்சித்தார். பொதுவாக உள்துறையை கவனிக்கும் முதலமைச்சரே இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம் என்ற நிலையில், முதலமைச்சர் விஜய் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமே அரசின் சார்பில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நேரலை நிறுத்தம் குறித்து சர்ச்சை
சட்டமன்ற நடவடிக்கைகளின் நேரலை திடீரென நிறுத்தப்பட்ட விவகாரமும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகள் மக்களிடம் சென்றுவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் நேரலை நிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல்வேறு திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டவை என்றும், குறிப்பாக ‘பிங்க் போலீஸ்’ திட்டம் தற்போது வேறு பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் அளித்த பதில்கள் தெளிவற்றதாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
‘வாய் திறங்க CM’ போராட்டம் தொடர்கிறது
சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மாநிலத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதில் ‘வாய் திறங்க CM’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
எதிர்க்கட்சிகளின் தொடர் கேள்விகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிக்காதது அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் சட்டமன்றத்துக்கு வெளியிலும் இந்த விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பு... மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 எப்போ தருவீங்க? சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட அதிமுக! உடனே பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா!!!