தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி தான்.! அடித்துக்கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை.!

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி தான்.! அடித்துக்கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை.!


annamalai talk about next election

தேர்தலின் போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும்  உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 இந்தப் போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் வரியை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். 5 ரூபாய், 4 ரூபாய் குறைப்பதாக கூறியிருந்தனர். பெட்ரோலில் மட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளனர். டீசலில் 1 ரூபாய் கூட குறைக்கவில்லை, பெட்ரோலில் 2 ரூபாய் குறைக்கவில்லை.

தேர்தல் வாக்குறுதியில் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளதை நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம். அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது. தமிழகத்தில் நாம் சாதாரண எதிரிகளை எதிர்க்கவில்லை. பெரும் எதிரிகள், பணத்தை கையிலே வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைபேச முடியும் என்று நினைக்கக்கூடியவர்கள்.

பணம்தானே எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கக்கூடிய தமிழகத்தில், பாஜக 25 எம்பிக்களை கொண்டு வருவோம் களத்தில் இறங்கியிருக்கிறோம். இது கனவாக மட்டும் சென்றுவிடக் கூடாது. 25 எம்பிக்கள் இங்கிருந்து வந்து அமரும்போதுதான், 150 எம்எல்ஏக்களுடன் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வரும்.

அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்கிறீர்கள். டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு கொடுக்கிறோம். உங்களுடைய 505 தேர்தல் வாக்குறுதிகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரை ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, சென்னை கோபாலபுரத்தில் முடித்துவைப்போம் என தெரிவித்தார்.