"கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டங்களில் பாஜக வெல்லும்".! அண்ணாமலை சூளுரை.!

"கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டங்களில் பாஜக வெல்லும்".! அண்ணாமலை சூளுரை.!



annamalai-says-that-bjp-will-win-the-election-in-coimba

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெல்லப்போகிறது என்று அண்ணாமலை சூளுரைத்திருக்கிறார்.

annamalai

இதன் தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி தொகுதிகளில் கண்டிப்பாக பாஜக தான் வெல்லும் என்று கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் பாஜகவின் வளர்ச்சியை தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

annamalai

மேலும் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ள தொகை தவறாக இருக்கலாம் என்று டிஜிபி ஷங்கர் ஜிவால் கடந்த வியாழக்கிழமை அன்று தெரிவித்தார். தன்னிடமிருந்து ஜாபர் சாதிக் விருது பெறுவதைப் போல இருந்த புகைப்படத்தை குறித்தும் விளக்கமளித்திருந்தார். அதில் சிசிடிவி கேமராக்கள் கொடுத்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டதாகவும் அந்த வகையிலேயே ஜாபர் சாதிக்கும் பரிசு பெற்றதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஜாபர் சாதிக் விவகாரத்தில், டிஜிபியை பலிகடாவாக்க திமுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது திமுகவினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.