ஒற்றை தலைமை விவகாரம்: அடிதடியில் முடிந்த அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு..!



admks-consultation-meeting-ended-in-a-frenzy

அ.தி.மு.க வில் ஓற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்த நாளில் இருந்தே உட்கட்சி பூசலும் எழுந்தது. கடந்த மாதம் சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்தது. உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அக்கட்சியின் வழக்குகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அ.தி.மு.க நகர கழகம் சார்பில் ஒற்றை தலைமை குறித்து தனியார் மண்டபத்தில் அக்கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திடீரென ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

AIADMK

இந்த மோதலில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் அங்கிருந்த இருக்கைகளை கொண்டு தூக்கி அடித்து, ஒலிபெருக்கியை தூக்கி வீசி அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முக்கிய நிர்வாகிகள் உட்பட்ட 3 பேர் காயமடைந்தனர்.