அரசியல் தமிழகம்

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்; அதிரடி ஆதரவு தரும் அரசியல் தலைவர்..!!

Summary:

actor vijay - political - support kamalakasan

நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய் தான் அரசியலில் களமிறங்குவது தொடர்பாக ஆளும் கட்சியினரை விமர்சிக்கும் வகையில் அதிரடியான கதைகளோடு பல்வேறு கருத்துகளை கூறினார். அதில் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன், மக்களுக்கு ஊழலற்ற நேர்மையான ஆட்சி வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

Image result for kamal hassan politician

இந்த நிலையில் சென்னையில் இன்று, நடிகர் கமலஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: ஸ்டெர்லைட் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக மனு அளிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது தேவையில்லை என்று கூறினார்.

மேலும் நடிகர் விஜய் குறித்து அவர் பேசுகையில், சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சிறப்பாக பேசியிருந்தார் அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கின்றேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement