கர்நாடக மாநிலத்திலும் விரைவில் ஆம் ஆத்மீ ஆட்சி.. அனைத்தையும் முன்னேற்றுவோம் - டெல்லி முதல்வர் உறுதி.!

கர்நாடக மாநிலத்திலும் விரைவில் ஆம் ஆத்மீ ஆட்சி.. அனைத்தையும் முன்னேற்றுவோம் - டெல்லி முதல்வர் உறுதி.!


aam-aadmi-party-national-conveyor-arvind-kejriwal-speec

சி.பி.ஐ ஆய்வு வாயிலாக பிரதமர் எனக்கு நேர்மையானவர் என்ற சான்றிதழை வழங்கியுள்ளார். நமது அரசு டெல்லியை முன்னேற்றியுள்ளது. பஞ்சாபில் அடுத்த முன்னேற்றம். கர்நாடகாவையும் முன்னேற்றுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மீ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், அக்கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார்.

இன்று காலை விமானம் மூலமாக பெங்களூர் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், "டெல்லி மாநிலத்தில் எனது அரசின் நடவடிக்கையால் 4 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு திரும்பியுள்ளனர். 2 கோடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக, அதாவது நாம் (ஆம் ஆத்மீ அரசு) பதவியேற்பதற்கு முன்னதாக நாளொன்றுக்கு அங்கு 8 மணிநேரம் மின்வெட்டு பிரச்சனை இருந்தது. இன்று 24 மணிநேரமும் மக்களுக்கு தடையில்லா இலவச மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மூலமாக சி.பி.ஐ எனது இல்லத்தில் சோதனை நடத்தியது. 

சி.பி.ஐ அதிகாரிகள் எனது படுக்கையறை வரை வந்து சோதனை செய்தார்கள். ஆனால், எந்த குற்ற ஆவணத்தையும் கண்டறியவில்லை. சி.பி.ஐ ஆய்வு வாயிலாக பிரதமர் எனக்கு நேர்மையானவர் என்ற சான்றிதழை வழங்கியுள்ளார். நமது அரசு டெல்லியை முன்னேற்றியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மீ அரசு அதன் முன்னேற்றத்தை செய்யும். 

இனி வரும் தேர்தலில் வெற்றி அடைந்து கர்நாடக மாநிலத்தையும் நாம் மாற்றுவோம்" என்று பேசினார். கர்நாடக மாநிலத்தில் 2023 மே மாதம் தேர்தல் நடைபெறும். அதற்கு தேவையான முன்னோட்டம் ஆம் ஆத்மீ கட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் கால் பதித்த ஆம் ஆத்மீ, கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.