முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...! அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆட்சிக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற குற்றச்சம்பவங்கள் அரசின் கவனத்தை ஈர்த்துள்ள சூழலில், உள்துறையில் முக்கிய மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பதிவான குற்றச்சம்பவங்கள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டி.நகரில் நடைபெற்ற 96 சவரன் நகை கொள்ளை மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: நேரம் பார்த்து தவெக-வுக்கு தாவும் திமுகவின் இளம் புயல்.....! தமிழக அரசியல் வட்டாரத்தில் நடக்கபோகும் பெரிய ட்விஸ்ட்..!!!
உள்துறையில் மாற்றம் குறித்து ஆலோசனை?
தற்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது வசம் உள்துறை மற்றும் காவல்துறையை வைத்திருக்கிறார். அதே நேரத்தில் நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது. இதனால், முழுநேர கவனம் தேவைப்படும் உள்துறையை தனி அமைச்சரிடம் ஒப்படைப்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில், காவல்துறையை நேரடியாகக் கண்காணித்து செயல்படக்கூடிய ஆளுமை மிக்க ஒருவரை இந்தப் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் அதிகாரிகள் மத்தியில் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா பெயர் முன்னிலையில்
இந்த நிலையில், தற்போதைய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் பெயர் முக்கியமாக பேசப்படுகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்த அவர், கட்சியின் முக்கிய நிர்வாக முகங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தேர்தல் களத்தை ஒருங்கிணைத்த விதமும், அரசியல் திட்டமிடலில் வெளிப்படுத்திய திறமையும் காரணமாக, சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம் என்ற கருத்து தவெக உயர்மட்ட வட்டாரங்களில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி இலாக்காவாக உள்துறை?
தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை கவனித்து வரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு, உள்துறையை மட்டும் தனி இலாக்காவாக வழங்கும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறை நிர்வாகத்தில் விரைவான முடிவுகள் எடுக்கவும், குற்றச்சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதுகுறித்து அரசின் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அமைச்சரவை மாற்றம் அல்லது இலாக்கா மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!