பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலையை கொண்டு வந்தால் 2 கோடி பரிசு!.. அறிவிப்பு..!!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலையை கொண்டு வந்தால் 2 கோடி பரிசு!.. அறிவிப்பு..!!


2 crore reward if Pakistan foreign minister brings his head

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, உத்திரபிரதேச பாஜக நிர்வாகி அவரது தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் அறிவித்தார். 

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு எதிராக பாஜக.வினர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

இதை தொடர்ந்து நேற்று முன்தினம், பாஜக சார்பில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் பேசும் போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.2 கோடி ரூபாய் பரிசு கொடுப்பேன் என காட்டமாக பேசினர்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அறிவிப்பை நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசினேன் என்றும், மேலும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.