மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்கள் தனக்குத்தானே பேசிக்கொள்பவர்களா? கண்ணாடி முன்பு பேசுபவர்களா? அப்போ கண்டிப்பா படிங்க!

Summary:

You speak for yourself


தற்போதைய வாழ்க்கைமுறையில் இரண்டுவகையான மனிதர்கள் உண்டு. ஒரு சிலர் "என்ன வாழ்க்கைடா இது" என்று தனக்குத்தானே புலம்பிக்கொள்வார்கள். ஒரு சிலர் "உனக்கென்னடா, நீ அழகன்டா" என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்பவர்கள். தனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா அல்லது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.

 தனக்குத்தானே பேசிக்கொள்வது ஆரோக்கியமான மனநிலையையும், அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடுகளையும் கொடுக்கும். ஆனால் என்ன வாழ்க்கைடா இது என்று தனக்குத்தானே புலம்புவது நல்லதல்ல. மேலும், தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் சவாலான பணிகளையும் எளிதாகச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

தனக்குத்தானே பேசிக்கொள்வது என்பது, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று தோன்றும்போதுதான் நடக்கும். உதாரணமாக நடைப்பயிற்சியின்போதோ, குளியலறையிலோ, தனியாக ஒரு அறையில் இருக்கும்போதோ தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் அதிகம்.

பெரும்பாலும் அந்தப் பேச்சானது அன்றாடப் பிரச்னைகள், முடிவு எடுக்க முடியாத விஷயங்கள், நிறைவேறாத ஆசைகள், கனவுகள் பற்றித்தான் இருக்கும். அவ்வாறு அதனைப்பற்றி முன்கூட்டியே தனக்குத்தானே பேசிக்கொள்ளும்போது அது நடைமுறையில் நடக்கும்போது எளிதாக எதனையும் எதிர்கொள்ளமுடியும். இதனை ஒருவிதமான ரிகர்சல் என்று கூட கூறலாம்.

மனிதர்கள் மனதுக்குள்ளேயே பேசுவது, வாய்விட்டுப் பேசுவது, கண்ணாடிமுன் நின்றபடி பேசுவது, ஒரு பேப்பரில் எழுதி வைப்பது என எல்லா வழிமுறைகளிலும் நிச்சயம் சில பலன்கள் கிடைக்கும். ஆனால் நாம் பேசுவது பாசிட்டிவான விஷயங்களை பற்றி தனக்குத்தானே பேசிக்கொள்வது நல்லது. நெகட்டிவான விஷயங்களை பற்றி பேசுவது தவறு.


Advertisement