இந்தியா லைப் ஸ்டைல்

என்ன நடக்குது இங்க..? தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி..! வைரல் வீடியோ காட்சி.!

பஞ்சவர்ணக்கிளி ஒன்று தென்னைமரத்தில் இருந்து இளநீரை பிடிங்கி குடிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுஷாந்த நந்தா அவர்கள் அவ்வப்போது மிகவும் சுவரசியான வீடியோ காட்சிகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் பஞ்சவர்ணக்கிளி ஒன்று தென்னைமரத்தில் இருந்து இளநீரை பிடிங்கி குடிக்கும் வீடியோ ஒன்றை அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

22 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் பஞ்சவர்ணக்கிளி ஒன்று தென்னைமரத்தின் உச்சியில் நின்று இளநீரை பிடுங்கி, அதனை வெட்டி அழகாக இளநீரை பருகுகிறது. இளநீர் குடிப்பது யாருக்குத்தான் பிடிக்காது என சுஷாந்த நந்தா அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement