சுவையான சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி... கோதுமை கார பொரி செய்வது எப்படி...

சுவையான சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி... கோதுமை கார பொரி செய்வது எப்படி...


wheat-kara-pori-recipe-in-tamil

குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையானது மட்டுமின்றி சத்தான கோதுமை கார பொரி வீட்டிலேயே செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை பொரி - 100 கிராம்
வெங்காயம் - 1 
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

தக்காளி சிறியது - 1
வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு 
உப்பு - சுவைக்கு ஏற்ப

 எண்ணெய் - 2 டீஸ்பூன் 

Wheat Kara pori

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோதுமை பொரியை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், வேர்க்கடலை, உப்பு சேர்த்து வறுக்கவும்.

இவ்வாறு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான கோதுமை கார பொரி தயார்.