கோதுமை மாவை வைத்து பேக்கரி ஸ்டைலில் சுவையான கேக் செய்வது எப்படி...

கோதுமை மாவை வைத்து பேக்கரி ஸ்டைலில் சுவையான கேக் செய்வது எப்படி...


wheat-flour-cake-recipe

கோதுமை மாவை வைத்து வீட்டிலேயே பேக்கரி ஸ்டைலில் சுவையான கேக் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
எண்ணெய் - அரை கப்
முட்டை - 2
 உப்பு - கால் ஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்
பால் - அரை கப்

முதலில் கோதுமை மாவு,வெல்லம்,எண்ணெய், முட்டை, உப்பு, பேக்கிங் சோடா ஆகியவற்றை மிக்சரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு மாவு பதத்திற்கு ஏற்ப அரை கப் பால் ஊற்றி அடிக்கவும்.

Wheat flour

கேக் செய்வதற்கு என்ற தேர்வு செய்யப்பட்ட பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவி ஒரு இரண்டு ஸ்பூன் கோதுமை மாவைப் போட்டு பாத்திரம் முழுவதும் படுமாறு தட்டிவைத்துக் கொள்ளவும். பின் அதில் அடித்த கலவையையும் சேர்த்து பரப்பி விட வேண்டும்.

ஒரு இட்லி பாத்திரத்தில் மண்ணெய் பரப்பி அதனுள் இந்த பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் ஒரு 45 நிமிடம் வேக வைக்க வேண்டும்.பிறகு சிறு கத்தியை வைத்து கேக்கைக் குத்திப் பார்க்க வேண்டும்.பின்னர், கத்தியில் ஒட்டாத பதத்தில் கேக் இருந்தால், அடுப்பை நிறுத்திவிட்டு வெளியே எடுக்கவும்.அவ்வளவு தான் சுவையான கேக் தயார்.