வாட்ஸாப் ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம்..! இனி மீண்டும் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!

வாட்ஸாப் ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம்..! இனி மீண்டும் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!



Whatsapp status time extended to 30 seconds

வாட்ஸாப்  ஸ்டேட்ஸ் நேரத்தை மீண்டும் 30 வினாடிகளுக்கு மாற்றியுள்ளது வாட்ஸாப் நிறுவனம்.

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது. அதேநேரம் கொரோனா சம்மந்தமான போலியான தகவல்கள், பயமுறுத்தும் புகைப்படங்கள் போன்றவையும் வாட்ஸாப் உள்ளிட்ட வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டது.

Whatsapp

இதனை குறைப்பதற்காகவும், வாட்ஸாப் சர்வர்கள் தங்குதடையின்றி இயங்கவும் 30 வினாடிகளாக  இருந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ் நேரத்தை அந்நிறுவனம் 15 வினாடிகளாக குறைத்தது. இதற்கு வாட்ஸாப் பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தநிலையில் தற்போது 15 வினாடிகள் மாற்றப்பட்டு மீண்டும் 30 வினாடிகளாக ஸ்டேட்டஸ் நேரம் உயர்த்தப்படுவதாக வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸாப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியை மீண்டும் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.