மீதமான சாதத்தை வைத்து சுவையான, சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.? ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

மீதமான சாதத்தை வைத்து சுவையான, சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.? ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!


vegetable-rice-balls-recipe-in-tamil

வீட்டில் சாதம் மீதமாகி விட்டதே என்ற கவலை வேண்டாம் மற்றும் குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கீறாங்களே என்ற டென்ஷனும் வேண்டும் இரண்டையும் வைத்து சுவையான, சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் 
கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2 
கார்ன் ஃப்ளார் - 1 டீஸ்பூன் கடலை மாவு - 1 டீஸ்பூன் 
பொட்டுக்கடலை மாவு - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

முதலில் சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு அரை அரைத்து கொள்ளவும். கொத்தமல்லி இலை, பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், கோஸ் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரைத்த சாதம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு தளர்வாகி காணப்பட்டால் அதில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பின் உருண்டைகளாக உருட்டி வைத்த பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ரைஸ் வெஜ் பால்ஸ் தயார்.